ஜவ்வரிசி உப்புமா
தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி - 1 கிண்ணம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
உருளைக் கிழங்கு - 1
பச்சைப் பட்டாணி - கைப் பிடி அளவு
பீன்ஸ் - 50 கிராம்
கடுகு - தாளிப்பதற்கு ஏற்ப
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கேற்ப
மாசாலா பொடி - சிறிதளவு
கொத்தமல்லி,
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் காய்கறிகள் எல்லாவற்றையும் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை விடவும். பிறகு கடுகு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

தயாராக நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை அவற்றில் போட்டு நன்றாக வதக்கவும்.

1/2 கிண்ணம் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.

தேவையான அளவு உப்பையும், சிறிது மஞ்சள் தூளையும் போட்டு நன்றாக வதக்கவும்.

எல்லாம் கொதித்து வரும் போது ஊற வைத்த ஜவ்வரிசியை அதில் உள்ள தண்ணீரை வடித்து காய்கறிகளில் போட்டு நன்றாக கிளறவும்.

நன்றாக வெந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலையை போட்டு இறக்கி வைக்கவும்.

இப்படி தினம், தினம் உப்புமாவிலேயே பலவிதங்களை செய்து உங்கள் வீட்டார்களை நீங்கள் ஆச்சர்யப்படுத்துங்களேன்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com