உசிலிஉப்புமா
தேவையான பொருட்கள்

அரிசி - 2 கிண்ணம்
பாசிப் பருப்பு - 1/2 கிண்ணம்
தேங்காய் துருவல் - 1 கிண்ணம்
கடுகு - தாளிப்பதற்கு தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 4
உப்பு - தேவையான அளவு

செய்முறை

முதலில் அரிசியையும், பாசிப்பருப்பையும் வாணலியில் போட்டு நன்றாக வறுக்கவும். பொன்நிறமாக வந்தவுடன் ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

அகன்ற அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய்யை ஊற்றி அடுப்பை பற்ற வைக்கவும். எண்ணெய் காய்ந்து வரும் நேரத்தில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத்தூள், மிளகாய் வற்றல் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

அதில் 3 கிண்ணம் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதித்து வரும் போது உப்பையும், தேங்காய் துருவலையும் போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும்.

தயாராக வறுத்து வைத்துள்ள அரிசி, பாசிப்பருப்பை போட்டு நன்றாக கிளற வேண்டும். அடிப்பிடித்துக் கொள்ளாமல் அரிசி உப்புமாவிற்கு கிளறுவதுபோல் கிளறவும்.

அரிசி நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து இறக்கி வைக்கவும்.

உசிலி உப்புமாவிற்கு தொட்டுக் கொள்ள தக்காளி சட்னி அல்லது கத்தரிக்காய் கோட்சு செய்தால் நன்றாக இருக்கும்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com