சென்னை மாநகர மக்களுக்கு அடுத்த இனிப்புச் செய்தி ஆட்டோ க் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டது(?)தான்! ஆமாம், ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டதால் உண்மையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். இந்த அறிவிப்போடு, ஆட்டோ க்கள் இனி எலக்ட்ரானிக் மீட்டர் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என்றும் கடுமையாக உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இனி கூப்பிடு தூரத்துக்குக் கூட 50 ரூபாய் வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் கேட்க முடியாது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை மூன்று மடங்குக்கும் மேலாக உயர்ந்து விட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலையும் இரு மடங்குக்கு மேலாக உயர்ந்துள்ளது. எனவே, 10 ஆண்டுக்கும் முன்பாக நிர்ணயித்த கட்டணம் அவர்களுக்கும் கட்டுப் படியாகாது. இப்போது இரண்டு தரப்புக்கும் நிம்மதி.
தொகுப்பு: அப்பணசாமி |