Legoland
தலைசிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டைனை கெளரவப்படுத்தும் வகையிலும், தங்களின் திறமையை வெளிப்படுத்தும் நோக்கிலும் அவரது உருவத்தை Lego நிறுவனம் பல்லாயிரக்கணக்கான சிறுசிறு பிளாக்குகளைக் கொண்டு தயாரித்துள்ளது.

சிறுவர்களின் கற்பனா சக்தியை வளர்க்கும் விதமாக அவர்கள் விளையாடுவதற்காக Lego என்ற விளையாட்டுப் பொருளைத் தயாரிக்கும் நிறுவனம்தான் இது. இதைப் போல பிரமிக்கத்தக்க வகையில் உலகப் பிரசித்தி பெற்ற தாஜ்மகால், ஐபில் டவர், fairy tales கதைகளில் வரும் அலாவுதீன், தேவதைகளின் உருவங்கள் மற்றும் அமெரிக்காவில் விண்ணைத்தொடும் உயர்ந்த கட்டிடங்கள் இன்னும் பல மாதிரிகளையும் இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.

குடும்பத்துடன் சென்று பல விதமான விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து ஒரு நாள் முழுவதையும் சந்தோஷமாகக் கழிக்க ஏற்ற இடம் கலி·போர்னியாவிலுள்ள Legoland. (இந்த இடத்தைப் பற்றி மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் www.legoland.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

ஸ்ரீ கோண்டு

© TamilOnline.com