தெரிந்து கொள்ளுங்கள்
Dr. கட்டுப்பள்ளி ராஜூ ஸ்ரீனிவாசன்

பேரா. கட்டுப்பள்ளி ஸ்ரீனிவாசன் ICTP ன் இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

இந்தியாவில் பிறந்த அமெரிக்கக் குடிமகனான பேரா. கட்டுப்பள்ளி ஆர். ஸ்ரீனிவாசன் அவர்கள், உலகப் புகழ் பெற்ற இன்டர்நேஷனல் சென்டர்ஃபார் தியோரடிக்கல் ·பிஸிக்ஸ் (International Center for Theoretical Physics (ICTP)) ன் இயக்குநராக மார்ச் 3, 2002 அன்று பொறுப்பேற்றிருக்கிறார். இத்தாலியிலுள்ள ட்ரைஸ்ட்(Trieste) என்னும் இடத்தில் அமைந்திருக்கும் ICTP, 1964ல் IAEA ன் ஆதரவோடு இத்தாலிய அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்போடு நிறுவப்பட்டது. ICTPன் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 90% அதாவது 20 மில்லியன் அமெரிக்க டாலருக்கும்மேல் இத்தாலிய அரசு பொறுப்பேற்று மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. ICTPக்கு ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 4000 பேர் பார்வையாளர்களாக வருகிறார்கள். எந்த நோக்கத்தில் ICTP உருவாக்கப்பட்டதோ அதன்படியே பெரும்பாலும் வளரும் நாடுகளிலிருந்து தான் பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள்.

*****

ப்ரவீன் செளத்ரி

யு.எஸ் டிபார்ட்மென்ட் ஆ·ப் எனர்ஜி (US Department of Energy) இயக்கிவரும் தேசிய லெபாரட்டரிகளில் (national laboratories) ஒரு பகுதியான புரோக்ஹெவன் நேஷனல் லெபாரட்டரியின் இயக்குநராக Dr. பிரவீன் செளத்ரி பொறுப்பேற்கிறார். 2003, ஏப்ரல் மாதம் 1ஆம் தேதியிலிருந்து இந்தப் புதிய பொறுப்பை ஏற்கும் இவர் 36 வருடங்களாக IBMல் விஞ்ஞானியாகவும் ஆராய்ச்சிகளுக்கான முதுநிலை மேலாளராகவும் (senior manager of research) சிறப்பாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

*****


மத்திய கிழக்கு நாடுகளின் முதல் சிங்க்ரோட்ரோன்

6, ஜனவரி 2003 அன்று ஜோர்டான் நாட்டு அரசர் அப்துல்லா அவர்கள், SESAME என்று அழைக்கப்படும் சிங்க்ரோட்ரோனுக்கு அடிக்கல் நாட்டினார். Synchrotron-light for Experimental Science and Applications in the Middle East என்பதன் சுருக்கம் தான் SESAME.

இப்போது புழக்கத்தில் இருக்கும் X-கதிர் வீச்சுகளை விடவும், சிங்க்ரோட்ரோன் பல மடங்கு அதிக சக்தி வாய்ந்தது. மத்திய கிழக்கு நாடுகளில் SESAME தான் முதல் சிங்க்ரோட்ரோன். இப்போது சிங்க்ரோட்ரோனைப் பயன்படுத்தும் 23 நாடுகளின் வரிசையில் ஜோர்டானும் இடம் பிடித்து விட்டது.

சமீர் அஹமத்கான்

© TamilOnline.com