விடுகதை
1. நீட்டிக்கொண்டு நடுவே படுக்கும்
சுருட்டிக் கொண்டு மூலையில் நிற்கும்
- அது என்ன?

2. நீண்ட நெடும்பாம்பு
நெளியாத கரும்பாம்பு
அசையாது படுத்திருக்கும்
அடிபட்ட செத்த பாம்பு - அது என்ன?

3. நிலத்தில் முளைக்காத செடி
நிமிர்ந்து நிற்காத செடி - அது என்ன?

4. செத்துப் போன அண்ணன்
வானத்திலிருந்து
ஒரு பெட்டி போட்டான்
அதைத் திறக்க முடியும் மூட முடியாது
- அது என்ன?

5. தட்டைத் தின்னும் தாளைத் தின்னும்
என் செவலைக் காளை
தண்ணீர் பட்டால் செத்துப்போகும்
என் செவலைக் காளை
- அது என்ன?

விடுகதை விடைகள்

1. பாய்
2. ரயில் தண்டவாளம்
3. தலை முடி
4. தேங்காய்
5. நெருப்பு

© TamilOnline.com