ஏப்ரல் 2003: குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

குறுக்காக:

5. வள்ளலாரைத் துன்புறுத்திய வெறியர் வாயிற்படி ஆர்ப்பாட்டத்தில் வெற்றியிழந்தனர் (6)
6. ஒரு சிறந்த சமையலில் இருக்க வேண்டியது (2)
7. மோசமான நிலைக்கு அழத் தொடங்கிச் சுற்றி வருதல் (4)
9. பொதுமக்கள் பணத்தை உறிஞ்சுபவர் பாயசம் சாப்பிட்டபின் நோக்குவது (4)
10. ஏற்ற சுழி ஒரங்கிழிந்த பழந்துணி (4)
12. குடத்திலே துள்ளிச் சின்னவன் சுமந்த பாதி பளு (4)
13. சந்தோஷத்தில் மரியாதையுடன் ஒருவரை அழைப்பது (2)
14. சிகிச்சை மாற்ற மசிப்பது வரும் (6)

நெடுக்காக:

1. குறிப்புசிறிதெனினும் பல லட்சம் பெறும் (2)
2. குலையை நடுக்குவது முன் சுழி நன்கொடை (4)
3. தலையில் தொந்தரவு தலைவெட்டிய சீப்பு இழுக்கும் ஆற்றல் (4)
4. சிவனிடம் பாடல் கடன் பெற்றவன் மேற்செல்ல அங்கம் குறைந்தவன் வாசிப்பது (6)
8. பேச்சில் சாமர்த்தியமாக அசைவக் கணை யாகத்தில் பெற்றது (6)
11. மன்மதருடன் கொஞ்சம் கலந்தவன் நியாயத்தை மதிப்பவன் (4)
12. பிறரைச் சேராமல் பனித் துளியுடன் பறவை போல் தாவு (4)
15. துடுப்பைப் போடு வேதனைதான் (2)

வாஞ்சிநாதன்
mailto:vanchinathan@vsnl.net

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக: 5. வாடிய பயிர் 6. ருசி 7. அவலம் 9. புறங்கை 10. உகந்த 12. தளும்பி 13. ஐயா 14. மருத்துவம்

நெடுக்காக:1. கோடி 2. உபயம் 3. ஈர்ப்பு 4. மிருதங்கம் 8. வக்கணையாக 11. தருமன் 12. தனித்து 15. வலி

© TamilOnline.com