குடமிளகாய் - உருளைக்கிழங்கு பொரியல்
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4
குடமிளகாய் - 2
பெரியவெங்காயம் - 1
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயப்பொடி - சிறிதளவு
மஞசள்பொடி - சிறிதளவு
மிளகாய்பொடி - 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - தேவையான அளவு
கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு, குடமிளகாய் மற்றும் வெங்காயத்தை நன்றாக நீரில் கழுவி, சிறிது சிறிதாக நறுக்கி, கலந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு நன்றாகக் காய்ந்ததும் கடுகு போட்டு, அது வெடித்ததும், பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடியைப் போட்டுக்கொள்ளுங்கள். கூடவே பொடியாக அரிந்து வைத்த வெங்காயத்தை போட்டு பொன்நிறமாகும் வரை வதக்குங்கள்.

பிறகு நறுக்கி கலந்து வைத்துள்ள உருளைக் கிழங்கு, குடமிளகாயை வாணலியில் போட்டு குறைந்த வெப்பத்தில் வேக விடுங்கள். நன்றாக வெந்து சிவந்து வந்த பிறகு தேவையான அளவு மிளகாய் பொடி, உப்பு போட்டு கிளறுங்கள்.

இறக்கி வைக்கும் முன்பு, கரம்மசாலா, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கொள்ளுங்கள்.

சாதத்திற்கு தொட்டுக் கொண்டு சாப்பிட இந்த பொ¡¢யல் மிகவும் சுவையாக இருக்கும். பூரி, சப்பாதிக்கும் கூட தொட்டுக் கொள்ளலாம்.

திருமதி ராஜலட்சுமி கிருஷ்ணன்

© TamilOnline.com