ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய் படம்
விஜய் நடிப்பில் வெளிவந்த ப்ரண்ட்ஸ் படத்தை தயாரித்த அப்பச்சன் மீண்டும் விஜய் நடிப்பில் அழகிய தமிழ் மகன் என்றொரு புதிய படம் ஒன்றை தயாரிக்கவிருக்கிறார். ஷ்ரேயா, நமீதா என இரண்டு நாயகிகள் நடிக்கவிருக்கிறார்கள். அழகிய தமிழ்மகன் மூலம் நமீதா விஜய்யுடன் முதன்முதலாக சேர்ந்து நடிக்கிறார்.

ஸ்வர்க்க சித்ரா நிறுவனத்தினரால் தயாரிக்கப்படும் இப்படத்தின் இசையை நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஏ.ஆர். ரகுமான் கவனிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை கவனிக்கிறார் பரதன்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com