தேவையான பொருட்கள்:
காய்ந்த வேப்பம்பூ - சிறிதளவு சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி புளிக்கரைசல் - 1/2 கிண்ணம் கெட்டியாக மிளகாய் பொடி - 1/4 தேக்கரண்டி வெல்லம் - 1/4 கிண்ணம்
செய்முறை:
வேப்பம்பூவை எண்ணெயில் வறுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் புளிக்கரைசலைச் சேர்த்து சில நிமிடங்களுக்குக் கொதிக்கவிடுங்கள்.
இதில் வெல்லத்தையும் மிளகாய் பொடியையும் சேர்த்துக் கலக்குங்கள். இரண்டிலிருந்து மூன்று நிமிடங்களுக்குக் கொதிக்க விடுங்கள்.
இந்தக் கரைசல் கெட்டியாக இல்லையென்றால் இத்துடன் 1/2 தேக்கரண்டி அரிசி மாவை, 1 மேஜைகரண்டி தண்ணீரில் கரைத்துச் சேர்த்துக் கொள்ளுங்கள். தாளித்த கடுகை இதில் கொட்டுங்கள்.
சரஸ்வதி தியாகராஜன் |