ஸ்ரீ ராமநவமி சமையல் குறிப்புகள்
பானகம்

தேவையான பொருட்கள்:

வெல்லம் - 1 கிண்ணம்
தண்ணீர் - 2 கிண்ணம்
சுக்குப் பொடி - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

வெல்லத்தைத் தண்ணீரில் கரைத்து வெள்ளைத் துணியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ளுங்கள். அத்துடன் சுக்குப் பொடியையும் ஏலக்காய் பொடியையும், உப்பையும் நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்.

இது தான் பானகம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com