உருவாகி வருகிறது தீ நகர்
சமூகப் பிரச்சினைகளுக்கு வித்தியாச மான வழியில் தீர்வு ஒன்றினை சொல்லும் படம் தீ நகர்.

கரண் நாயகனாக நடிக்கும் இப்படத்தை எஸ்.ஆர். ஸ்டூடியோ படநிறுவனம் தயாரிக்கிறது. நாயகியாக உதயதாரா நடிக்கிறார். இவர்களுடன் மீரா கிருஷ்ணன், பாத்திமா பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.

படத்தில் புரட்சிகரமான பாடல்கள் பல இடம் பெற்றுள்ளன. ஃபோர் ஸ்டூடன்ஸ் படத்துக்கு இசை அமைத்த ஜாஸ் கிஃப்ட் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். பாடல்களை கவிஞர் சினேகன் மற்றும் கருணாநிதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை கவனிக் கிறார் திருமலை.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com