ஏப்ரல் மாதத்தில் இராம நவமியை ஒட்டி, சான் லியாண்டிரொ பத்ரிகாஸ்ரமத்தில் ஏப்ரல் 12ம் தேதியும், லிவர்மூர் சிவா விஷ்ணு கோவிலில் ஏப்ரல் 13ம் தேதியும், பாரதி கலாலயா மாணவர்கள் இசை நிகழ்ச்சிகள் வழங்கினார்கள். வயலின் ஆசிரியைகள் திருமதி. பார்வதி ஸங்கர் அவர்களும், மைதிலி ராஜப்பன் அவர்களும் இந்நிகழ்ச்சிகளில் மாணவர்களுடன் பங்கேற்றார்கள். மிருதங்க மாணவர்களாகிய நாராயணன் சுந்தர ராஜனும், அர்ஜுன் ஹரனும் முறையே மிருதங்கம் வாசித்தார்கள்.
தியாகராஜ ஸ்வாமிகளின் விநாயகர் துதியான "கிரிராஜ சுதா"வுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. நாட்டையில் பஞ்சரத்ன கிருதியான "ஜகதானந்தகாரகா’வை ஆசிரியைகள் திருமதி. நந்தினி ராமமூர்த்தி மற்றும் தன்யா ஆகியோர்களும் மாணவர்களுடன் இணைந்து வழங்கினார்கள். ‘பண்டுரீதி கொலு", "மாகேலரா", "சுகுணமுலே", "ஸ்ரீஆஞ்சநேயம்", போன்ற கீர்த்தனங்களும் இடம் பெற்றன. இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் தனியாகவும் பாடல்கள் வழங்கினார்கள். தீபா தனியாக ஹம்சத்வனி ராகத்தில் ‘ரகுநாயகா’வும், மீரா புராண சந்திரிகாவில் "தெலிசிராம்", மானசா பெளளை ராகத்தில் "ஓ ராமா ஸ்ரீ ராமா"வும் பாடினார்கள். தன்யா என்ற ஆசிரியை வாகதீஸ்வரி ராகத்தில் பாடினார். ஸ்ரீனிவாஸ், ரவி குருமூர்த்தி, ப்ரியா ஆகியோர் மீரா பஜன் பாடினார்கள். ரீதி கெளளை ராகத்தில் "பரிபாலய பரிபாலய" என்ற பாடலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
பாகீரதி சேஷப்பன் |