அம்மாவின் திறமை இருக்குமா?
'அவளுடை ராவுகள்' என்ற மலையாளப் படத்தின் மூலம் திரையுலகின் உச்சத்திற்குச் சென்ற மிகவும் திறமையான நடிகை சீமா, தென்னிந்தியத் திரைப்படங்களில் தனக்கென்று ஒரு தனியிடத்தை நீண்ட காலம் தக்கவைத்திருந்தார். தன் முதல் படத்தின் இயக்குநர் ஐ.வி. சசியைத் திருமணம் செய்து கொண்ட போதும் முழுமையாக நடிப்பை விட்டுவிடாமல் அவ்வப்போது மனதுக்குப் பிடித்த நல்ல கதாபாத்திரங்களில் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது அவரது குடும்பத்திலிருந்து மேலும் ஒருவர் நடிக்க வருகிறார்.

தமிழில் 'காதல்.காம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார் சீமாவின் மகள் அனு. அவரது புகைப்படத்தைப் பாருங்கள்! சீமாவின் சாயல் அச்சுபிசகாமல் அப்படியே இருக்கும். உருவத்தில் அம்மாவை ஒத்திருப்பது போலவே நடிப்பிலும் அம்மாவைப் போன்றே திறமையாக நடிப்பாரா?

யாமினி

© TamilOnline.com