நடிகர்களான ஆட்டோ டிரைவர்கள்!
அமெரிக்கத் திரைப்பட கல்லூரியில் படித்த புஷ்கர் காயத்ரி தம்பதி இயக்கும் ஓரம்போ படத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிஜ ஆட்டோ டிரைவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பது சுவராஸ்யமான தகவல்.

ஆர்யா, பூஜா நடிக்கும் இப்படத்தை ஏ பி ஃபிலிம் கார்டன் படநிறுவனம் தயாரித்து வழங்குகிறது. ஆட்டோ என்ற பெயரில் முதலில் இப்படத்திற்கான வேலைகள் எல்லாம் தொடங்கப்பட்டன. சில காரணங்களால் பின்பு ஓரம்போ என இப்படத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜி.வி. பிரகாஷ் படத்திற்கான இசை அமைக்க, நா. முத்துக்குமார் பாடல்களை இயற்றியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வந்த ஆட்டோ ரேஸிங் பற்றிய செய்திதான் ஓரம்போ படத்தின் கதை கருவாகும்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com