அமெரிக்காவாழ் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் நோக்கத்தில், வரும் கோடை விடுமுறையில் முதன்முதலாகத் 'தமிழ்மொழிப் பயிற்சிப் பள்ளி' மேரிலாந்து மாநிலத்தில் நடக்கவிருக்கிறது. மாணவர்கள் நான்கு வாரங்கள் அங்கு தங்கிப் படிப்பார்கள்.
அமெரிக்கப் பல்கலைக்கழங்களில் தமிழர் அல்லாதோருக்குத் தமிழ் மொழி கற்பிக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்ட பாடங்களின் மூலம் பயிற்சிப் பள்ளியில் மாணவர்கள் தமிழைப் பயில்வர். பள்ளி முடியும்போது பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்படும் முதலாண்டு தமிழ்மொழிப் பாடத்திட்டத்தைப் படித்து முடித்துவிட்டு அதில் தேர்ச்சி பெற்றிருப்பார்கள்.
பள்ளியில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இடைநிலைப்பள்ளியில் படிக்கக்கூடிய வயதாவது இருக்க வேண்டும். மேலும், பள்ளியில் சேரும் முன் அவர்களுக்குத் தமிழ் எழுத்துகள் தெரிந்திருக்க வேண்டும். பொருள் தெரியாவிட்டாலும் எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தால் போதும்.
விவரங்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சிப் பள்ளியின் இணையதளத்தைக் காண்க: http://www.learntamil.com/summercamp |