இதயத்திற்கும் ஒரு சாக்சு
பலவீனம் அடைஞ்ச இதயத்தைச் சரியான முறையில் செயல்படவைக்கும் வகையில் தொப்பி அல்லது சாக்சு போன்ற ஒரு பாலியஸ்டர் fiberல் ஆன உறை ஒன்றை (Acorn CorCap) ஹூஸ்டனில் ஒரு மருந்தகம் உலக மெங்கும் உடல் நலம் குன்றியவர்கள் ஒரு சிலரிடம் பரிசோதித்து வருகிறதாம்.

இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு, உடலின் பலவீனத்தினால் தேர்வு பெற முடியாதவர்களுக்கு இந்த உறையினைப் பொருத்திவிடலாமாம். இதயத்தினைப் புதியது போல் செய்யாவிட்டாலும், செயல்பாட்டுத்திறனை விரிவுபடுத்தி, இது பிராணவாய்வினை நன்கு செயல்படுத்தி, இருதயத்தை நல்ல முறையில் இயங்கச் செய்யும் ஆற்றலினைச் செய்து வைக்கும் என்று நம்பப்படுகிறது.

ல்லபடியாகப் பரிசோதனைகள் முடிந்து, எப்படியும் இச்சாதனம் 2005ஆம் வருட வாக்கில் வெளியில் வரும் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்திருக்கின்றனராம்.

(தகவல் உதவி: லாஸ் ஏஞ்ஜல்ஸ் டைம்ஸ்)

ஸ்ரீகோண்டு

© TamilOnline.com