இன்றைய அடிதடி மாசாலா படங்களுக்கு மத்தியில் சில நேரங்களில் சில நல்ல படங்களும் அவ்வப்போது வந்து செல்வது உண்டு. அந்த வரிசையில் வருகிறது எல்.வி. இளங்கோவன் இயக்கும் 'பிறப்பு'.
எஸ்.ஆர். பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக இப்படத்தை கணேஷ், சுந்தராஜன், பரமசிவம் மற்றும் வீரகுமார் தயாரித்து அளிக்கின்றனர்.
நாயகனாக புதுமுகம் பிரபா நடிக்க நாயகியாக 'தூத்துகுடி' கார்த்திகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த மயூகாவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சண்முகராஜ், அஞ்சலிதேவி, ஜார்ஜ், பரமசிவம், கஞ்சா கருப்பு 'மீண்டும் மீண்டும்' சிரிப்பு புகழ் சோபனா ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் பாலுமகேந்திராவின் மகன் சங்கி மகேந்திரா என்பது சிறப்பு செய்தியாகும். ஸ்ரீனிவாஸ் பி. பாபு எடிட்டிங்கை கவனிக்க, பூபதி கலையை கவனிக்கிறார்.
வாரிசற்ற மருது, காளியம்மன் தம்பதிகளுக்கு தன் மகன் கண்ணனை, வேலன் மல்லிகா தம்பதியினர் தத்து கொடுக்க இதனால் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை சொல்லும் கதை 'பிறப்பு'.
சமீபத்தில் நடைபெற்ற ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாக்கியராஜ் பேசுகையில், ''16வயதினிலே படத்தினைப் போல்.. இப்படமும் மக்கள் மத்தியில் பேசப்படும்...'' என்று கூறி வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |