மே 2003 : குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

5. தெரிந்துகொள் நெருடு நல்வழிப்படுத்து (6)
6. குண்டு கோதுமையாலானதா? (2)
7. கொதித்தெழு, சுடுதலை விட்டுக் கருகு (4)
9. உள்ளே வர விட்டுத் தொடங்காமல் ஊட்டு (4)
10. மகாளய அமாவசைக்கு அடுத்ததில் பெருஞ் சத்தம் செய்யும் (4)
12. எதிரும் புதிருமிருக்கையில் பின்புறம் பார்!(4)
13. பிள்ளையாருக்கு அம்மா சுழி பெரியது (2)
14. நாகர் தாள வாத்தியம் குலைத்த கட்டுப்பெட்டி (6)

நெடுக்காக

1. இப்படிப் போய் அவலாகு (2)
2. சும்மா சாப்பிடுவதற்கு உடை (4)
3. கன்னம் கரிய தலையில் உமிழ் (4)
4. கையுள்ளே காட்ட கிராமியக் கலை (6)
8. வளத்துடன் மாச கட்பிசு திரியும் (6)
11. இன்பம் கொண்ட தங்க இடை வரி (4)
12. செல்வம் கிடைக்கும் பண்டிகை தினம்? (4)
15. நிறத்தில் கறுப்பானாலும் உப்பு போல் சுவை (2)

குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.

ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு. (அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net

குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக: 5. அறிவுறுத்து 6. ரவை 7. பொசுங்கு 9. புகட்டு 10. பட்டாசு 12. திரும்பு 13. உமா 14. கர்நாடகம்
நெடுக்காக: 1. ஆறி 2. நொறுக்கு 3. கதுப்பு 4. கரகாட்டம் 8. சுபிட்சமாக 11. சுங்கம் 12. திருநாள் 15. கரி

© TamilOnline.com