தேவையான பொருள்கள்
கேரட் - 100கி (வேகவைத்து, கொரகொரவென்று அரைத்தது) கடலைமாவு - 2 தேக்கரண்டி பிரட் துண்டுகள் - 8 (அ) 10 உப்பு - தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப கரம்மசாலா பொடி - தேவைக்கேற்ப இஞ்சி பூண்டு விழுது - தேவைக்கேற்ப
செய்முறை
அரைத்த இஞ்சி பூண்டு விழுதை கடலை மாவுடன் சேர்த்து இறுகப் பிசையுங்கள். இத்துடன் அரைத்த கேரட் விழுதையும், ரொட்டித்துண்டுகளையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளுங்கள்.
இறுதியாக, உப்பு மிளகாய்த் தூள், கரம் மசாலா தூள் எல்லாம் கலந்து இறுக்கமாகப் பிசைந்து கொள்ளுங்கள்.
இதைச் சிறுசிறு வடைகளாகத் தட்டி தோசைக் கல்லில் போட்டு எடுங்கள். வித்தியாசமான சுவையில் சத்தான கட்லெட்டைச் சுவைக்கலாம்.
உலகம்மாள் கல்யாணசுந்தரம் |