குலோப் ஜாமூன் செய்யும் போது வெட்டியெடுத்த பிரட் துண்டுகளின் ஓரங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் வெறுமனே பிசைந்து அவற்றை உதிர்த்து விடுங்கள். அதனுடன் ஒரு கிண்ணம் அரிசி மாவு அல்லது சோள மாவு கலந்து கொள்ளுங்கள்.
அத்துடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியைச் சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்துப் பிசையுங்கள். வடை பதத்திற்கு மாவைப் பிசைந்த பிறகு, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அவைகளைக் கையில் வைத்து வடையாகத் தட்டி அடுப்பில் வைத்த எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொறித்து எடுங்கள். மொரமொரப்பான, சுவையான வடை நொடியில் தயார். ஊறவைத்து அரைத்து கஷ்டப்படாமலேயே சத்தான வடையைச் சுவைக்கலாம்.
உலகம்மாள் கல்யாணசுந்தரம் |