மொழி என்பது தொடர்புக்குதான். மொழி ஒரு இனத்தின் அடையாளமாக மாறுவதை சிலரால் ஏற்று கொள்ள முடியாததாகவுள்ளது. தமிழ் தொன்மையான மொழி. உலகிலுள்ள மற்ற மொழிகளைவிட 2 ஆயிரம் ஆண்டுக்கு முன்தோன்றியது. பல செம்மொழிகள் இருந்தாலும் வாழும் மொழியாக தமிழ் இன்று விளங்குகிறது. நமது கலாச்சாரத்தை சுமந்து வருவதாக தமிழ்மொழி அமைந்துள்ளது. நாம் யார் என்ற புரிதலுடன் இல்லாமல் வானம்
வசப்படும் என செயல்படும் போது அடியோடு விழுந்து விடுவோம்.
கனிமொழி, தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகள், மதுரையில் நடந்த 'மதுரம் 2007' விழாவில்.
நீதித்துறையின் பணி ஒன்று நடந்த பிறகு அது சட்டப்படி சரியா, தவறா என்று விமர்சிப்பதுதான். ஆனால் இன்று நீதித்துறை, 'அரசாங்கம் இப்படி செய்ய வேண்டும்; சட்டசபை, பார்லிமென்ட ஆகியவை இப்படி செய்ய வேண்டும்' என்று மற்றவர்களது வட்டத்தில் மூக்கை நுழைத்து அறிவுறுத்த வேண்டிய காட்டாயம் நிலவுகிறது. ஒரு கிரிக்கெட் மேட்சில் ஓர் ஆட்டகாரர் மிக மோசமாக விளையாடுகிறார் என்பதற்காக அம்பயர், தானே ஆட்டக்காரரிடமிருந்து கிரிக்கெட் மட்டையை வாங்கி ஆட ஆரம்பித்து விடலாமா? நீதிமன்றத்தின் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்தாத அரசாங் கங்களை நீதிமன்றத்தால் என்ன செய்ய முடியும்...?
ஸ்ரீகிருஷ்ணா, அண்மையில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி, பேட்டி ஒன்றில்
உயரே செல்லச் செல்ல பூமி ஒரு புள்ளி யாகிவிடுவது போல், அறிவில் உயர உயர மனிதகுலம் அன்பை இழந்து கொண்டிருக் கிறதா? நம் தொழில்நுட்பம் அமெரிக்காவை அடுத்த வீடு ஆக்கிவிட்டது. ஆனால், அடுத்த வீட்டை அமெரிக்காவாக்கிவிட்டது. வயிறு, மூளை, இதயம் மூன்றுக்கும் சமபந்தி வைப்பது போல்தான் கல்வி. தொழில்நுட்பக் கல்வி பெற்ற பலர் அமெரிக்க, ஐரோப்பியக் கனவு களில் இருக்கிறார்கள். அவர்கள் தாய்நாடு தந்த
அறிவை இந்த தாய்நாடே முதலில் அனுபவிக்கட்டும். வெளிநாடுகளுக்குச் சென்ற விஞ்ஞானிகள் இந்தியாவுக்கு வரவேண்டும்.
வைரமுத்து, கவிஞர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பட்டப்பளிப்பு விழாவில்
போலீஸாரின் சேவை மனிதாபிமானத்தை அடிப்படையாகக் கொண்டதாகவும், நேச மிக்கதாகவும், ஊழலற்றதாகவும் இருக்க வேண்டும். மக்கள் நலனைக் காப்பதில் மிகவும் பொறுமையோடு சிறப்பாக செயலாற்றி மக்களின்
நம்பிக்கையைப் பெற வேண்டும். நேரத்துடன் செயலாற்றுவதோடு மனதள விலும், உடலளவிலும் உறுதியானவர்களாக போலீஸார் செயல்பட்டு மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். மனிதாபிமானம் என்பது
உயர் அதிகாரி களிடமிருந்து உருவாகி அது கீழ்நிலை காவலர்கள் வரை தொடர வேண்டும்.
அப்துல்கலாம், இந்திய குடியரசு தலைவர், காவல்துறையின் 150வது ஆண்டு நிறைவுவிழாவில்
எதிர்கட்சிகள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மாநகராட்சி தேர்தல் முறைகேடு அதோடு முடிந்து விட்டதாக கருதக்கூடாது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும் பல தொகுதிகளில் அத்தகைய முறைகேடு நடக்க
வாய்ப்பு உள்ளது. எனவே தனக்குள்ள செல்வாக்கினால் தனித்து நின்று ஜெயிக் கலாம் என்று ஜெயலலிதா நினைக்க கூடாது. விஜயகாந்த் தனித்து நின்றால் டெபாசிட் போகும். அவர் மட்டும் ஜெயித்த மாதிரிதான் நிலைமை
வரும். இதை இருகட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். மத்தியில் காங்கிரசுக்கு மாற்றாக பாரதீய ஜனதா வருவதுதான் நல்லது. மூன்றாவது அணி வர வாய்ப்பு இல்லை. எனவே பாரதீய ஜனதா, ஜெயலலிதா, விஜயகாந்த்
ஒரே அணியில் இருப்பது நல்லது.
சோ, ஆசிரியர் 'துக்ளக்', துக்ளக் இதழின் முப்பத்தேழாம் ஆண்டு விழாவில்.
நாம் பொறுப்பேற்று ஒரு ஆண்டு முடிவதற் குள் பல வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் தோழமை கட்சிகளுடன் இணைந்து தி.மு.க அரசு அமைப்பதற்கு முன்பே வெளியிட்ட தேர்தல்
அறிக்கை முக்கியமாக மக்களை கவர்ந்த ஒன்று. அது மக்களை கவர்வதற்காக வெளியிட்ட அறிக்கை அல்ல. மக்களின் கவலைகளை நீக்க, கஷ்டங்களை போக்க, அவர்கள் தலை மீது உள்ள கனமான சுமைகளை குறைக்க
அளிக்கப்பட்ட வாக்குறுதிகள்.
மு.கருணாநிதி, தமிழக முதல்வர், ஏழைகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு வழங்கும் விழாவில் |