ஓக்லேண்டில் (Oakland) உள்ள ஸ்காட்டிஷ் ரைட் மையத்தில் (Scottish Rite) வருகிற ஜூன் 8 ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து, மாலை 5 மணி வரையிலும் நடைபெறவிருக்கிறது.
''சுய லாபம் கருதாது சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயலும் உண்மையான தொழில் முனைவோரே சமூகத் தொழில் முனைவோராகிறார்கள். இதற்க AIF ஒரு நல்ல உதாரணம். 2001 ஆம் ஆண்டில் குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அமெரிக்க ஜனாதிபதி கிளிண்டன் மற்றும் சில இந்தியத் தலைவர்களின் ஆதரவோடு, சுய லாபம் கருதாத நிறுவனமாகத் தன்னை அடை யாளப் படுத்திக் கொண்டு இந்தியாவிலுள்ள சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவர் லதா கிருஷ்ணன். இந்த இரண்டு வருடத்தில் இவரது சீரிய முயற்சியால் ரஜத் குப்தா, ஷப்னா ஆஸ்மி, பேரா. C. K பிரகாலாத் மற்றும் கைலாஷ் ஜோஷி போன்றவர்கள் இந்த நிறுவனத்தின் செயல் பாட்டில் இணைய முடிந்தது. செப்டம்பர் 11 கொடூரத்தின் போது AIF, நிவாரணப் பணிகளுக்காக ஆங்காங்கே நிதி சேகரித்தது. இந்த வகையில் சுமார் 1 மில்லியன் டாலர் பணத்தை இந்த நிறுவனம் நிவாரண நிதியாக சேகரித்துப் பணிகளில் ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு உதவியதுதான் இந்த நிறுவனம் செயல்படுத்திய நிவாரணப் பணிகளில் முதல் திட்டம். Service Corps என்ற திட்டத்தில் தகுதியுள்ள திறமையான ஈடுபாடுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து 9 மாதங்கள் அவர்களை இந்தியாவுக்கு அனுப் பியது. இதிலுள்ள தன்னார்வத் தொண்டர்கள் இந்தியாவிலுள்ள மக்களுடனும் குழந்தை களுடனும் நேருக்கு நேர் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களின் தேவைகளை உண்மை யாக அறிந்து அவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டார்கள். Digital Equalizer என்ற பெயரில் கம்ப்யூட்டர் பயிற்சியையும் AIF நிறுவனம் இந்தியாவில் நடத்தி வருகிறது.
வருகிற ஜூன் மாதம் 8ஆம் தேதி நடக்கவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் இந்தியாவில் கல்வி மற்றும் பெண் உரிமை போன்றவற்றை மையப்படுத்தி நடக்கவிருக்கிறது. இந்தியாவில் வாழ்கின்ற ஒதுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் மற்றும் தனிநபர்களின் வரலாறும் இந்தக் கூட்டத்தில் சொல்லப்படவிருக்கிறது. மேலும், இந்தக் கூட்டத்தில் அமெரிக்காவில் கிடைக்கும் வளங்களைக் கொண்டு இந்தியாவில் என்னென்ன மாற்றங்களைத் தூண்டிவிட முடியும் என்று தீர்மானிக்கப்படவிருக்கிறது.
Kamran Elahian, Tech investor; Dr Ashutosh Varshney, Academician; Waheeda Rehman, Actress; Vikram Akula, Micro Financier ஆகியோர் இந்தக் கூட்டத்தில் முக்கியப் பேச்சாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்தக் கூட்டத்தில் பண்டிட் ஹரி பிரசாத் செளரசியாவின் புல்லாங்குழல், ஜார்ஜ் புரூக்ஸ்ஸின் சாக்ச·போன், லாரி காரியல்லின் கிடார், மற்றும் விஜய் காதேயின் தபேலாவின் கூட்டமைப்பில் இனிமையான கச்சேரிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜெயா பத்மநாபன் |