செல்லுலாய்டு கிளாசிக்ஸ்
விருதுபெற்ற கலை இயக்குநர் இர்வைன்-ரம்யா ஹரிஷங்கர் ஜூன் 15ஆம் தேதி மாலை 6 மணிக்கு பர்க்ளேயில்(Barclay) அர்ப்பனா நடனநிறுவனத்தின் சார்பில் நடக்கும் 'செல்லுலாய்டு கிளாசிக்ஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிரபல நடன இயக்குநரும், இணை இயக்குநருமான ராதிகா சுராஜித்தும்(புகழ்பெற்ற தனஞ்செயனின் முதல் மாணவி) இந்த நிகழ்ச்சியல் கலந்து கொள்கிறார். இவ்விருவரும் பழைய பாலிவுட் திரைப்படப்பாடல்களுக்குப் பாரம்பரிய இந்திய நடனம் ஆடப் போகிறார்கள்.

கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக ஹரிஷங்கர், பல்வேறு கருத்துகளை மையமாகக் கொண்டு தன் நடனங்களை வடிவமைத்து வருகிறார். பெரும்பாலும் பெண்மை என்ற கருத்தை மையப்படுத்தி ஜப்பானியர்களின் தாய்கோ இசைக்கலைஞர்களையும், ·ப்ளெமென்கோ பாடகர்குழுவையும் கொண்டு கலாசார கலப்பு ஏற்படுத்தி நடனத்தை அமைக்கிறார். சுராஜித்துக்குத் திரைப்படத்தின் மேலுள்ள தீவிர பற்றின் காரணமாக பாரம்பரியக்கலையையும், நவீன மின்னணு ஊடகங்களையும் ஒருங்கிணைத்துப் புதுமையைப் படைக்கிறார். உத்ரா ராம் மற்றும் ஆஷினா இசைக்குழு, ஹேமன்ந் எக்போட்(தபேலா) மற்றும் சில சிறப்பு இசைக்கலைஞர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியில் இசைவிருந்து படைக்கவிருக்கிறார்கள்.

இந்தியாவில் 'செல்லுலாய்டின்' ஆரம்ப காலத்தில் பாட்டும் நடனமும் திரைப்படத்தின் மிக முக்கிய அம்சங்களாக இருந்தன. வைஜெயந்திமாலா (பாடகி/நடிகை), கோபி கிருஷ்ணா (நடனம் ஆடுபவர் / வடிவமைப்பவர்) மற்றும் எம்.எஸ். சுப்புலெஷ்மி (பாடகி / நடிகை) இன்னும் சில கலைஞர்களும் திரைப் படத்துறையில் ஈடுபட்டிருந்தார்கள். 60களில் மின்னணு இசைக்கருவிகளும் மேற்கத்திய இசையும் தாக்கம் ஏற்படுத்திய பிறகு, பாரம்பரியக் கலையைப் பின்பற்றிய பழக்கம் பிளவுபட்டு புதிய திரைப்படங்களில் பாட்டும், நடனமும் பிரபலமாகத் தொடங்கின. தற்போது மீண்டும் கர்நாடக சங்கீதத்திற்கும் சினிமாவிற்கும் உறவு ஏற்பட்டிருப்பதாக உணரமுடிகிறது. பம்பே ஜெயஸ்ரீ, உன்னிகிருஷ்ணன் போன்ற கர்நாடக சங்கீதக் கலைஞர்களும், ஆஸ்காருக்குப் போட்டியிட்ட 'தேவதாஸ்' படத்திற்கு நடனம் வடிவமைத்த பிர்ஜூ மகாராஜையும் உதாரணமாகச் சொல்லலாம்.

வெவ்வேறு மொழிகளில் பிரபலமான திரைப்படப்பாடல்களை எடுத்துக் கொண்டு, ஹரிசங்கரும், ஷ¥ரஜித்தும் அந்தப்பாடல் களுக்கு சாஸ்திரிய நடனத்தையும், நாட்டுப்புற நடனத்தையும் பொருத்தி அவைகளுக்குரிய இலக்கணத்தையும் மீறாமல் புதிய வகையில் நடனத்தை வடிவமைத்திருக்கிறார்கள். 'திரைப்படத்துக்காக வடிவமைக்கும் நடனமும் மேடை நிகழ்ச்சிக்காக வடிவமைக்கும் நடனமும் முற்றிலும் வேறுபட்டவை.' என்கிறார் ஷ¥ரஜித். 'செல்லுலாய்டு கிளாசிக்ஸ¥க்காக, சரியான முறையில், நடன அமைப்பு பொருந்தும் படியான பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 'இது என்னுடைய ஒரு துணிச்சலான முயற்சி. இந்த முயற்சி பார்வையாளர்கள் எல்லாரிடத்திலும் பாரம்பரியக் கலையின் மீது ஒரு நாட்டத்தை ஏற்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.' என்கிறார் ஹரிஷங்கர். LA பகுதியில் இது போன்ற நிகழ்ச்சி நடைபெறுவது இதுதான் முதல் முறை. உத்ரா ராமும், ஆஷியானா இசைக்குழுவும் திரையிசையில் மிகவும் புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள். நாகின் (ஹிந்தி), சீமீன் (மலையாளம்), தில்லானா மோகனாம்பாள் (தமிழ்), சாகர சங்கமம் (தெலுங்கு) உள்ளிட்ட சாஸ்திரிய இசைவகைகளிலிருந்து இசைத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஹரிஷங்கர் அவர்கள் பல்வேறு அமைப்பு களிடமிருந்து தனது படைப்பு களுக்காகப் பாராட்டுகளைப் பெற்றுள்ளார். உதாரணமாக, கன்டிரி ஆர்ட்ஸ் ஏஜென்சியின், "Outstanding Artist Award 2002'', யைச் சொல்லலாம். கடந்த 20 வருடங்களாக 12 முழு நீள தயாரிப்புகளை வழங்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலும் உலகம் முழுவதிலுமுள்ள சேவை அமைப்புகளுக்காக வழங்கப்பட்டவை. ஷ¥ரஜித் சாஸ்திரிய நடனத்தில் அசைக்கமுடியாத அடித்தளைத்தைக் கொண்டிருக்கிறார். புகழ்பெற்ற ஒரு இந்தியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தக திமி தா' என்ற நடன நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் இவரே! 'இந்திரா', 'அழகி' போன்ற பல படங்களுக்கு நடனம் வடிவமைத்திருக்கிறார். இவர் நடனம் வடிவமைத்த பல படங்கள் விருதுகளும் பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சியைக் காண்பதற்கான நுழைவுச்சீட்டு $25 மற்றும் $15ல் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு தியேட்டர் பாக்ஸ் ஆ·பீஸ் (949) 854-4646, அல்லது டிக்கட் மாஸ்டர் (714)-740-7478. என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.thebarclay.org-ல் தொடர்பு கொள்ளலாம். MasterCard, VISA, American Express, and Discover போன்றவைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். தியேட்டர் முகவரி, 4242 Campus Drive at Bridge and West Peltason Roads in Irvine.

© TamilOnline.com