புத்தரின் பெயரால்...
கடந்த மாத தென்றல் இதழில் ஒரு பக்க விமர்சனத்தைப் படித்திருப்பீர்கள்...

இத்திரைப்படம் முதன்முறையாகக் கடந்த வருடம் கார்த்திகை மாதம் ''Oslo, Norway'' சர்வதேச படவிழாவில் காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்படத்திற்கு ''பட விழாக்களுக்கும்'', ''பரிசுகளுக்கும்'' ஒன்றும் குறைச்சல் இல்லை.

''Newport Beach" சர்வதேச படவிழாவில் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரையிடப்பட்டு 'மிகச் சிறந்த' வெளிநாட்டுப் படமாகப் பார்வை யாளர்களால் தெரிவு செய்யப்பட்டது. ''Beverly Hills" சர்வதேச படவிழாவில் மே 8ஆம் தேதி ஆரம்பப் படமாகத் திரையிடப்பட்டது. விழா அமைப்புக்குழு எதிர்பாராத வகையில் திரை நிறைந்த காட்சியாகக் காண்பிக்கப்பட்டது. பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் அமெரிக்கக் குடிமக்களாகக் காணப்பட்டார்கள். இதனால் வர்த்தக ரீதியில் இப்படம் வெற்றியடையும் என்பதை உறுதி செய்ய முடிந்தது. இவ்விழாவில் 'மிகச் சிறந்த' வெளிநாட்டுப் படமாக நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டது, படத்தின் வெற்றிப்படியில் இன்னும் 30 படியாக அமைந்தது.

தற்போது நடைபெறும் ''Dallas ஆசிய படவிழாவில்'' 26ஆம் தேதி மேமாதம் காண்பிக்கப்படவிருக்கிறது. மேலும் வருகிற ஜூலை-ஆகஸ்டில் நடைபெறவிருக்கும் ''wine country" சர்வதேச படவிழாவிலும் இத்திரைப்படம் 19ம் தேதி ஜூலை napa valleyல் காண்பிக்கப்படும்.

மே மாதம் 16ம் தேதி முதல் லண்டன் மாநகரின் முக்கிய நகரங்களில் திரையிடப்பட்டு, ஆசனங்கள் நிறைந்த காட்சியாக காண்பிக்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது நிலவி வரும் போர்நிறுத்த ஒப்பந்தமும், அமைதிக்கான பேச்சுவார்த்தையும் வெற்றியளிக்க, வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவற்றை உதவ வேண்டுகிறோம்.

''புத்தரின் பெயரால்'' திரைப்படம் வலியுறுத்திய அமைதியை இலங்கை மக்கள் அடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

பிரகாசம்

© TamilOnline.com