தற்போது வெளியாகியிருக்கும் 'புன்னகைப் பூவே' படத்திற்கு, ''72 வருட தமிழ் சினிமா வரலாற்றில் புதிய முயற்சி'' என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் சபாவிடம் இந்த விளம்பரத்தைப் பற்றிக் கேட்டதற்கு, ''உண்மைதாங்க... இதுவரைக்கும் வந்த படங்களில் எல்லாம் ஹீரோவை மையப்படுத்தித் தான் கதை துவங்கும். க்ளைமாக்ஸ¥ம் ஹீரோவின் பார்வையிலேயே முடியும். ஆனால் இந்தப் படத்தில் இரண்டு பெண்களுக்கிடையில் நடக்கும் விஷயத்தை மையப்படுத்தியிருக்கிறோம். இப்படி ஒரு கதை இதற்கு முன் வந்திருக்கிறதா என்று '·பிலிம் நியூஸ்' ஆனந்தனிடம் கேட்டோம். அவரும் ஒரு வாரம் அவகாசம் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்ந்து இதுவரைக்கும் தமிழில் 7865 படங்கள் வந்திருக்கின்றன. இப்படி ஒரு கதை அமைப்பு எந்தப் படத்திலும் இல்லை என்று சொன்னார்.
யாமினி |