நளதமயந்தி
கமலஹாசனின் ராஜ்கமல் ·பிலிம்ஸ் தயாரிக்கும் 'நளதமயந்தி' படத்தில் மாதவன் பாலக்காட்டைச் சேர்ந்த பிராமின் சமையல் காரராக நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்னால் கமலஹாசன் எழுதிய இந்தப் படத்தின் ஸ்கிரிப்டுக்கு மெளலி தன் இயக்கத்தில் உயிர் கொடுத்திருக்கிறார். பாலக்காட்டில் ஒரு கிராமத்தில் தொடங்கும் கதை ஆஸ்திரேலியா வின் மெல்போர்னுக்குச் செல்கிறது. தன் குடும்பத்திற்கு ஆதரவு தரவும், தன் சகோதரிக்குக் கல்யாணம் செய்து வைக்கவும், அதிகமாக பணம் சம்பாதிக்கவும் சமையல் வேலைக்காக படத்தின் ஹீரோ ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்.

மலையாளத் திரைப்படங்களில் இப்போது பிரபலமாக இருக்கும் நடிகை கிது மோகன்தாஸ் இந்தப் படத்தின் கதாநாயகியாகத் தமிழில் அறிமுகமாகிறார். ஸ்ருத்திகா, அனு மோகன், டி. பி. மாதவன், டெல்லிகணேஷ், ஸ்ரீமன், மதன் பாப், வையாபுரி, திவ்ய தர்ஷினி, பாலாசிங் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ரமேஷ் விநாயகம் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு வசனம் எழுதி, இயக்கியிருக்கிறார் மெளலி.

யாமினி

© TamilOnline.com