ஜூன் 2003:குறுக்கெழுத்துப்புதிர்
குறுக்காக

3. பாதி சந்நிதி தவம் கலைந்த ஒரு பருவம் (5)
6. காய்ந்து விறகு இடையிட்ட தேனுண்ணி (4)
7. சஞ்சலம் தலையின்றிக் குழம்பக் கையூட்டு (4)
8. நாட்டைப் பாதுகாக்கும் பகல் கிடைப்பதில் திகில் இல்லை (6)
13. வெளுக்கப் பயன்படும் சாட்டையா ஈரம் சற்றுக் கசியும் (6)
14. இருப்பிடத்தைக் கூறும் முதுமையின் அடையாளம்? (4)
15. விடாதே, பிடி! துறைத் தலைவருக்கு நிறுத்திவைப்பு (4)
16. மாலையில் சிவந்திருப்பது (2, 3)

நெடுக்காக

1. முனிவரின் முகத்தில் தவழும் (5)
2. கீதா கேட்டபின் விசயன் ஏந்தியது (5)
4. சுத்தமாகப் பிரிவைத் தரும்! (4)
5. ஆனால் இவனுக்கு வேலை முடிந்தபின்தான் மேசை (4)
9. வேலை சேரும் இறுதியில் சாவு, அடக்கம் (3)
10. பெரிய போராளி மதத்தை நிறுவினார் (5)
11. அரபிக் கடலோர அந்தணர் (5)
12. முதல் வரிசை விளக்கு தோகையாள் கீதம் (4)
13. பிழையற்ற அரியாசனம் விளம்புகளின்றித் திருத்தப்பட்டது (4)

கட்டங்களுக்குள்ளே சொல்லை நிரப்பும் வகைப் புதிர்கள் ஆங்கிலத்தில் தான் பிறந்ததென்றாலும், ஒரு சொல்லின் இருபொருள்களை அடிப்படையாகக் கொண்டு புதிரமைப்பது தமிழில் நெடுங்காலமாக இருந்து வருகிறது.

விடுகதைகள் என்று வழங்கப்படுபவை விடையோடு பொருத்தமாகச் சுவையாக இருந்தாலும் அவற்றிலெல்லாம் சாதாரணமாக வாசகருக்குத் தீர்க்கப் போதுமான குறிப்புகள் இருப்பதில்லை. ஆனாலும் இந்த இருபொருள் புதிர்களில் அந்தக் குறையில்லை.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினர் வெளியிட்ட விடுகதைத் திரட்டு நூலில் அப்படி நான் ரசித்த ஒன்று:

அக்கிரகாரம் எப்படி அழிவது?
ஆனபயிர் எப்படிக் கெடுவது?

விடையையறிந்தோர் மின்னஞ்சலில் அனுப்புங்கள்.

வாஞ்சிநாதன்
vanchinathan@vsnl.net


குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்

குறுக்காக: 3. வசந்தம் 6. வறண்டு 7. லஞ்சம் 8. கப்பல்படை 13. சவுக்காரம் 14. முகவரி 15. துரத்து 16. மேல் வானம்

நெடுக்காக:1. தவக்களை 2. காண்டீபம் 4. சல்லடை 5. தச்சன் 9. பணிவு 10. மகாவீரர் 11. நம்பூதிரி 12. அகவல்

© TamilOnline.com