தேவையான பொருட்கள்
வேகவைத்த ஏதாவது ஒரு பாஸ்தா - 2 கிண்ணம் நறுக்கிய பார்ஸ்லி (Parsley) - 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் தக்காளி பொடியாக நறுக்கியது - 2 கிண்ணம் வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1/2கிண்ணம் சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன் 1 1/2"துண்டங்களாக நறுக்கிய கத்தரிக்காய் - 3 கிண்ணம் உப்பு - தேவையான அளவு மிளகு பொடி - 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன் காய்ந்த ஓரிகானோ (dried oregano) - 1/4 டீஸ்பூன் பர்மேஸான் சீஸ் (Parmesan cheese) - அவரவர் தேவைக்கு வேண்டிய அளவு
செய்முறை
ஓவனை 400 டிகிரி ·பாரன்ஹீட்டிற்கு சூடு படுத்தவும். கத்தரிக்காய், உப்பு, மிளகு பொடி இவற்றை கலந்து ஒரு பேகிங் ஷீட்டில் பரத்தவும். அதன் மேல் ஆலிவ் ஆயிலை நன்றாக விட்டு கலக்கவும். இதை ஓவனில் வைத்து 20 நிமிடம் பேக் செய்யவும்.
அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு போட்டு நன்றாக வதக்கவும். நறுக்கிய தக்காளியையும் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளவும். உப்பையும் போட்டு நன்றாகக் கலக்கி வதக்கவும்.
இது ஒன்று சேர வந்த பின்பு, வெந்த கத்தரிக்காயை இதனுடன் போட்டு கலக்கவும். நறுக்கிய பார்ஸ்லி(Parsley), நறுக்கிய கொத்தமல்லியையும் போட்டு வதக்கவும்.
பிறகு வெந்த பாஸ்தாவை இதனுடன் போட்டு நன்றாக கலக்கவும். இதை ஒரு தட்டில் பரப்பி அதன் மீது பர்மேஸான் சீஸ்(Parmesan cheese) தூவி சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.
இதை 350 டிகிரி ·பாரன்ஹீட்டிற்கு சூடுபடுத்தப்பட்ட ஓவனில் ஒரு பத்து நிமிடம் பேக் செய்தும் சாப்பிடலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |