கத்தரிக்காய் காஸரோல் (Casserole)
தேவையான பொருட்கள்

பெரிய துண்டங்களாக நறுக்கிய கத்தரிக்காய் - 2 கிண்ணம்
தக்காளி சாஸ் - 2 கிண்ணம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
இத்தாலியன் ஸ்பைஸ் - 1 டீஸ்பூன் (எல்லா கடைகளிலும் கிடைக்கும்)
ரிக்கோடா சீஸ் அல்லது மாண்ட்ரே ஜாக் - 1/3 கிண்ணம்
பிரெட் தூள் - 1/4 கிண்ணம்
ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

கத்தரிக்காயை மைக்ரோவேவ் ஓவனிலோ அல்லது ஓவனிலோ வைத்து குழையாமல் தனித்தனியாக இருக்கும்படி வேகவிடவும். தக்காளி சாஸ், நறுக்கிய வெங்காயம், உப்பு, இஞ்சிபூண்டு பேஸ்ட், இத்தாலியன் ஸ்பைஸ் ஆகியவற்றை ஒன்றாக நன்கு கலந்து வைத்துக்கொள்ளவும்.

ஓவனை 350 டிகிரி ·பாரன்ஹீட்டிற்கு சூடு படுத்தவும். ஒரு காஸரோல் பாத்திரத்தை எடுத்து முதலில் தக்காளி சாஸ் கலவையை கொஞ்சம் பரத்தவும். இதன் மீது வெந்த கத்தரிக்காயை கொஞ்சம் பரத்தவும். அடுத்ததாக சீஸை கொஞ்சம் தூவவும்.

அடுத்ததாக சாஸ் கலவையை பரத்தி இதன் மீது மீதி உள்ள வெந்த கத்தரிக்காயைப் போடவும். கத்தரிக்காய் மீது ,மீதி உள்ள எல்லா சீஸையும் தூவவும். ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணெயுடன் பிரெட் தூளைக்கலந்து மேலாகப் போடவும். ஒவனில் 40 நிமிடம் பேக் செய்து பின் வெட்டி சூடாக சப்பாத்தி அல்லது பாஸ்தாவுடன் சாப்பிடலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com