கத்தரிக்காய் ·ப்ரிட்டர்ஸ் (Fritters)
தேவையானபொருட்கள்

கத்தரிக்காய் - 1
மைதாமாவு - 1/4 கிண்ணம்
பேகிங் பவுடர் - 1 டீஸ்பூன்
முட்டை - 1
மிளகு பொடி - 1 டீஸ்பூன்
பால் - கொஞ்சம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு

செய்முறை

கத்தரிக்காயை வட்ட வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். மைதாமாவு, பேகிங் பவுடர், மிளகு பொடி, உப்பு ஆகியவற்றை ஒன்றாக நன்கு கலக்கவும். முட்டையை அடித்து இதனுடன் கலக்கவும். பால் கொஞ்சம் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும். மற்றபடி எல்லாம் பஜ்ஜி செய்வது போலவே செய்ய வேண்டியதுதான்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com