தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் - 1 கடலைமாவு - 1/2 கிண்ணம் அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் மைதாமாவு - 1 டீஸ்பூன் சிவப்புமிளகாய் பொடி - 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிட்டிகை உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
கத்தரிக்காயை வட்ட வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். கடலைமாவு, அரிசி மாவு, மைதாமாவு, சிவப்பு மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, பெருங்காயம், வேண்டிய உப்பு எல்லாவற்றையும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
எண்ணெயை வாணலியில் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்த பின்பு, ஒவ்வொரு கத்தரி வில்லையையும் மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வடிகட்டியில் அல்லது பேப்பர் டவல் மீது வைத்து பின்னர் எடுத்து வைக்கவும்,(அடுப்பை மிதமாக வைத்து பஜ்ஜி செய்யவும்.)
சரஸ்வதி தியாகராஜன் |