கத்தரிக்காய் சாலட்
தேவையான பொருட்கள்

பெரிய கத்தரிக்காய் - 2
ஆலிவ் ஆயில் - 1/4 கிண்ணம்
பார்ஸ்லி(Parsley) - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
லைட் ப்ரெளண் சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை ஜுஸ் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஓவனை 400 டிகிரி ·பாரன்ஹீட்டிற்கு சூடுபடுத்துங்கள். கத்தரிக்காயை ஊசியால் பல இடங்களில் குத்திக்கொள்ளுங்கள். பின்னர் ஓவனில் பத்து நிமிடம் அல்லது நன்றாக மென்மையாக வரும் வரை பேக் செய்யுங்கள்.

பின்னர் நன்கு ஆறியதும் அதன் தோலை நீக்கி அதனுள் உள்ள விரையை நீக்கி விடுங்கள். அதன் சதைப்பற்றான பாகத்தை மட்டும் எடுத்து ஒரு வடிகட்டியில் அல்லது ஒரு மெல்லிய துணியில் போட்டு அதில் உள்ள தண்ணீரைப் பிழிந்து நீக்கிவிடுங்கள். பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் போட்டு மீதி உள்ள எல்லா பொருட்களையும் போட்டு நன்றாகக் கலந்து சில மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில்(FRIDGE) வைத்து பின்னர் சாப்பிடலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com