சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதித் தமிழ் அன்பர்களின் கால அட்டவணையில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நாள் ஆகஸ்ட், 3. அன்று மதியம் 2 மணிக்கு, தொலைக்காட்சி பட்டிமன்றப் புகழ் சாலமன் பாப்பையா அவர்கள் "தற்காலத்தில் தமிழ் தழைப்பது தமிழகத்திலே! அயலகத்திலே!" என்ற தலைப்பில் நடக்கவிருக்கும் பட்டிமன்றத்திற்குத் தலைமை தாங்கி நடத்த வருகிறார்.
அவரைப் பற்றி சில செய்திகள்: சாலமன் பாப்பையா மதுரைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர். சிறந்த இலக்கியவாதியும் ஆவார். அவரிடம் மாணவர்களாக இருந்த பலர் இன்று இந்த விரிகுடாப்பகுதியில் வசிக்கின்றார்கள். 'சன்' தொலைக்காட்சியில் 'தினம் ஒரு குறள்' என்ற நிகழ்ச்சி வழங்கிவருகிறார். நகைச்சுவையாகப் பேசி மக்களை மகிழ்விப்பதில் மன்னர்.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒரு நகைச்சுவை ஓரங்க நாடகமும் நடக்க இருக்கிறது.
முத்தமிழ் விழாவில் 'நாட்டுப்புறப் பண்' என்ற புதுமையான சிறப்பு இசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறார் ஸ்ரீதரன் மைனர். நாட்டுப்புறப் பாடலுடன் 'ராப்' இசையை இணைத்து இவர் வழங்க இருக்கும் பாடல் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் வருக.
பாகீரதி சேஷப்பன் |