பிப்ரவரி 2007: குறுக்கெழுத்துபுதிர்
குறுக்காக

3. வாசனைப் பொருள் பொன் சூடிய சான்றோரில் முதல்வர் (5)

6. புது நாரும் முனையின்றி மெலியும் விதம் (4)

7. கிராமம் சுவைதருவதில்லாத உழைப்பு பளபளக்கும் மெல்லிய நூல் (4)

8. வேல் முனை வடு புனித நதி சேர தண்டனை (6)

13. அவன் தலையைக் கிள்ளி எடுத்த குழப்பத்தில் மற்றொருவன் (6)

14. போருக்கு ஊதுவது இல்லாதவன் சரடு (4)

15. இத்தகைய ஊசி செவிடோ கடைசி வரை வராதென்பர் (4)

16. கொம்பா, சேர்த்து மாற்றி விடு, எரித்துப் போராடலாம் (5)

நெடுக்காக

1. ஆனாலும் இதுவரை திரையில் காணாதவர்க்கு நேற்றும் இன்றும் அதே வதனம்தான் (5)

2. பாடிப்பறந்தெம் மாங்குயில்கள் கிராமத்தில் இசைப்பது (5)

4. சிவனடியார் நாடுவது முனிவரின் கோபச் சொல் மாற்றிய இறுதிச் சொல் (4)

5. மணந்த வருகை அறிவிப்பு முடியவில்லை (4)

9. இனிய மாங்கனியும் எனக்குச் சிறையானதே (3)

10. ஒரு நூறில் எத்தனை கணக்கு! (2, 3)

11. மஞ்சள் காவிரி பாதி முற்றம் வந்தடைந்தாள் (5)

12. பிடுங்கி, தலைசீவி பல் முனை உடையப் பிரி (4)

13. அணு விஞ்ஞானிக்கு முன் அரவாணி அரேபியக் கதை நாயகன் (4)

வாஞ்சிநாதன்
vanchinathan@gmail.com

ஜனவரி 2007 புதிர்மன்னர்கள்
1. வி. சந்திரசேகரன், சன்னிவேல்
2. எஸ்.ஸ்ரீவத்ஸன், உட்லண்ட்ஸ் ஹில், கலி.
3. லஷ்மி சங்கர்.

புதிர்மன்னர்கள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.

ஜனவரி 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்

குறுக்காக: 5. ஆடி, 6. மரப்பொந்து, 7. சம்பவ, 8. தினம், 9. மிளகு, 11. கபாலி, 13. வம்பர், 16. பாரம்பரிய, 17. தரி
நெடுக்காக: 1. படிவம், 2. ராம நவமி, 3. தொப்பி, 4. தந்தன, 10. குவலயம், 12. பாசுரம், 14. பத்தரை, 15. நபர்

© TamilOnline.com