இதுவொரு முழக்கம்
திமுக வரலாற்றில் மொழிப் போராட்டத்துக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால் அந்தக் கட்சி தொடங்கிய போது அறிவிக்கப்பட்ட கொள்கைகளில் பலவற்றை பிற்காலத்தில் அவர்களாகவே கைவிட வேண்டி வந்தது. மீதிக் கொள்கைகள் நடைமுறைச் சிக்கல்களில் மாட்டிக்கொண்டன.

அதில் இந்தி எதிர்ப்பு மற்றும் தமிழ் ஆதரவு போராட்டமும் ஒன்று. திமுக 16 வருடங்கள் ஆட்சியிலிருந்தும் தமிழ்வழிக் கல்வி, தமிழை ஆட்சி மொழியாக்குவது, செம்மொழியாக அறிவிக்கச் செய்வது என்று எதையும் செய்ய முடியவில்லை. ஆனால் இப்போது மீண்டும் ஒரு மொழிப் போராட்டத்தை நடத்தத் தயார் என்று திமுக தலைவர் அறிவித்துள்ளார்.

ஆட்சி அதிகாரப் பின்புலத்தில் ஆதிக்கமாக இருக்கும்போது உருப்படியான நடவடிக்கையில் ஈடுபடாமல் தற்போது எந்தப் போராட்டமாவது நடத்துவது என்ற நடைமுறையில் திமுக உள்ளது. அதன் வெளிப்பாடுதான் திமுக தலைவரின் மொழிப் போராட்ட அறிவிப்பு.

இதுவொரு முழக்கம் மட்டும்தான்!

துரை.மடன்

© TamilOnline.com