காமராஜர் நூற்றாண்டு விழா
காங்கிரஸ்காரர்களின் லேட்டஸ்ட் முழக்கம் மத்தியில் சோனியாவின் ஆட்சி, தமிழகத்தில் காமராஜர் ஆட்சி. இதையொட்டி மாநில காங்கிரசுக்கு உற்சாக டானிக் தர காமராஜர் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளார்கள் தமிழக காங்கிரஸ் காரர்கள்.

முதலில் மாவட்டந்தோறும் காமராஜர் நூற்றாண்டு விழா நடத்துவது, பிறகு நிறைவு விழாவில் சோனியாவை வரவழைத்து பிரம்மாண்டமாக நடத்துவது. இந்தத் திட்டங்கள் நிறைவேற காங்கிரஸ் கலாசாரமாகிவிட்ட பிரிக்கமுடியாத கோஷ்டிப்பூசல் எல்லாவற்றுக்கும் ஒத்துழைப்பு வழங்குமா? இது கேள்வி மட்டும் அல்ல; எதிர்பார்ப்பும்கூட.

துரை.மடன்

© TamilOnline.com