'உன்னை பார்த்த நாள்முதல்...'
ரங்கீலா உட்படத் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்த ரசூல் தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகாகிறார். இவர் 'உன்னை பார்த்த நாள்முதல்' என்ற படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இப்படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி ஆர்த்தி சாப்ரியா அறிமுகமாகிறார்.

இதுவும் காதல் கதைதான். குறுகியகாலத் தயாரிப்பாக உருவாகும் இப்படம் செப்டம்பர் மாதம் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

மதுவந்தி

© TamilOnline.com