அபரிமிதமான டாலர்
முதலீட்டு நிறுவனங்களும், NRIக்களூம் டாலரைக் கொண்டுவந்து கொட்டோ கொட்டென்று கொட்டியதில் இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஏறிவிட்டது. இதன் பலன் ரூபாயின் மதிப்பிலும் ஏற்றம். ஒரு டாலருக்கு சுமார் 46 ரூபாய் என்கிற அளவைத் தொட்டுவிடமோ என்ற பயத்தில் ரிசர்வ் வங்கி மளமளவென்று உள்ளே இறங்கி டாலரை உறிஞ்சியது. ·பெடரல் ரிசர்வ் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் "அமெரிக்காவிலும் பொருளாதார முன்னேற்றம் தென்படுகிறது" என்று சொன்னதும் சரிந்துகொண்டிருந்த டாலரை நிமிர்த்தி வைக்க உதவியது.

வேறொரு கொடையையும் ரிசர்வ் வங்கி கொடுத்தது. இப்போது சில தேவைகளுக்கு முன்னிருந்ததைவிடப் பல மடங்கு அந்நியச் செலாவணி கொண்டு செல்லமுடியும். பட்டியலைப் பாருங்கள்:


அனுமதிக்கப்பட்ட காரணம் இப்போது (டாலர்)

வெளிநாட்டில் வேலை 100,000 5,000
வெளிநாட்டுக்குக் குடிபெயர்தல் 100,000 5,000
நெருங்கிய உறவினரைப் பராமரிக்க 100,000 5,000
நெருங்கிய உறவினரைப் பராமரிக்க 100,000 30,000
வெளிநாட்டில் மருத்துவம் 100,000 50,000
கன்சல்டன்ஸி கட்டணம்(நிறுவனங்களுக்கு) 1,000,000 100,000

கொண்டாட்டம்தான் போங்கள். தங்கத்தைக் கொண்டுபோய் ஸ்விட்சர்லாந்தில் அடகு வைத்த காலம்போய், வேண்டியதை அள்ளிக்கொள் என்று சொல்லும் காலம் வந்துவிட்டது போலிருக்கிறது!

© TamilOnline.com