ரகுராம் ராஜன் - இந்தியாவுக்குப் பெருமை!
ஐஐடி-டெல்லி மற்றும் ஐஐஎம்-அஹமதாபாதில் பயின்ற ரகுராம் ராஜன் IMFஇன் தலைமைப் பொருளாதார நிபுணராக (Chief Economist) நியமிக்கப்பட்டதில் இந்தியர்களுக்கு மிகப் பெருமை. 40 வயதான இவர் இந்தப் பதவியை வகித்தோரில் வயது மிகக் குறைந்தவராவார்.

சிகாகோ பல்கலைக்கழகத்தின் கிராஜுவேட் ஸ்கூல் ஆப் பிசினஸிலும் இவர் பயின்றார். அமெரிக்கன் ·பினான்ஸ் அசோசியோஷன் வழங்கும் பெருமைக்குரிய விருதான ·பிஷர் பிளாக் பரிசையும் இவர் வென்றதுண்டு. இந்தப் பதவிக்குப் பெருமை சேர்க்கட்டும் என்று 'தென்றல்' இவரை வாழ்த்துகிறது.



© TamilOnline.com