குறுக்காக
1. முழுமையில்லாக் காற்று வீசப் பிழையுடன் ராணுவம் வைத்திருக்கக் காரணம் (5) 4. அசலுடன் சாயல் (3) 6. நல்ல முடிவு (3) 7. தானிய வங்கி தொடங்காமல் சுயமாய் வேலை செய்யும் (5) 8. தகுந்த யமுனை தொடங்குமிடத்துடன் சிறப்பானது (4) 9. சேகரிப்பவன் இடையொடியத் தடுமாறிப் பணியாளனானான் (4) 12. ஒரு மலர் மரியாதையின்றி மற்போர் வீராங்கனையை அழைக்கும் (5) 14. இடை வேட்டி புனிதத் தலம் சுற்றக் கண்ணுக்குத் தெரிவது (3) 16. ஆசிரியர் திருடிய முதல்வர் ரத்தம் (3) 17. அண்ணன் மெய்யாகப் பாடிய குழப்பத்தில் மீன்கொடியோன் (5)
நெடுக்காக
1. பயனற்ற நிலம் சுருங்கத் தொடங்கும் முன் உடுத்திக்கொள் (3) 2. ஒரு வள்ளல் பதம் மாற்றி எழுதிய வடமொழிக் காவியம் (5) 3. துவைக்கப்படாத் துணியென்றாலும் எலும்புத் தாடையை மறைக்கும் (4) 4. காணக் கிடைக்காச் சிம்மாசனத்தில் குறை (3) 5. தலைகளின்றி நசுக்கி வரன் தந்த கிரகம் (5) 8. படை வடிவம் உறுதியளித்த சொல் (5) 10. வட்டியுடன் சீர்காழி பாதி வரை அழைத்துச் செல்பவனோ? (5) 11. இலக்கணத்திற்குட்பட்ட கவிதை ஒரு சுமங்கலிப் பார்வையில் அடங்கும் (4) 13. சுரமற்ற அமைச்சர் தாவுவதில் தேர்ந்தவர் (3) 15. வைணவர் போற்றாத தேங்காய்க் கண்ணன் (3)
வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net
புதிர் விடைகள்
குறுக்காக: 1. தற்காப்பு [தப்பு + காற் (று)] 4. அச்சு 6. சுபம் 7. தானியங்கி 8. உயரிய [ய + உரிய (=தகுந்த)] 9. சேவகன் 12. வாடாமல்லி 14. காட்சி [காசி + ட் (ட்='வேட்டி' இடை)] 16. குருதி 17. பாண்டியன் நெடுக்காக:1. தரிசு (தரி = ஆடை உடுத்து) 2. காதம்பரி (காரி + பதம்) 3. புத்தாடை ("எலும்புத் தாடையில்" மறைந்துள்ளது) 4. அரிய (அரியணை-ணை) 5. சுக்கிரன் 8. உருவாக்கு 10. வழிகாட்டி 11. கலிப்பா 13. மந்தி (மந்திரி - ரி) 15. சிவன் |