தேவையான பொருட்கள்
கனிந்த வாழைப்பழம் 5 ரவை - 1 கிண்ணம் பால் - 2 கிண்ணம் கிரீம் - 1/2 கிண்ணம் சர்க்கரை - 2 கிண்ணம் நெய் - 1 1/2 கிண்ணம் உலர்ந்த திராட்சை - 1/4 கிண்ணம் முந்திரி - 1/4 கிண்ணம் ஏலக்காய் பொடித்தது - 1 தேக்கரண்டி உப்பு - 1 சிட்டிகை
செய்முறை
வாணலியில் நெய்யைச் சூடு பண்ணி, முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வையுங்கள்.
அதே நெய்யில் ரவையைக் கொட்டிப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
வாழைப்பழத்தைத் தோல் உரித்து, மசித்து, ரவையோடு சேர்த்து, முந்திரி, பாதாம், திராட்சையையும் சேர்த்து, பாலைச் சிறிது சிறிதாக விட்டு கிளறிக் கொண்டிருங்கள். தீ மிதமாக இருக்கட்டும்.
தேவைக்கு உப்பு சேர்த்து, பால் முழுவதும் ரவையால் உறிஞசப்படும் வரை கிளறவும்; பின் சர்க்கரை, க்ரீம் இரண்டையும் கலந்து, அல்வா பதம் வரும்வரை மிதமான தீயில் கிளறிக் கொண்டே இருங்கள்.
அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடியைத் தூவி, கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்.
இந்த அல்வா 2 - 3 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். |