வாழைப்பழ ஆரஞ்சு பானம்
தேவையான பொருட்கள்

வாழைப்பழம் கனிந்தது -1 1/2 கிண்ணம்
ஆரஞ்சுச் சாறு -1 கிண்ணம்
எலுமிச்சைச் சாறு - 1/4 கிண்ணம்
தண்ணீர் - 3 கிண்ணம்
ஜிஞ்சர் ஏல் அல்லது சோடா - தேவைக்கேற்ப

செய்முறை

வாழைப்பழங்களைத் துண்டுகளாக நறுக்கி, பிளெண்டரில் கூழ் செய்யுங்கள். அதோடு ஆரஞ்சுச் சாறு, எலுமிச்சைச் சாறு, தண்ணீர் (தேவையானால் சிறிது சர்க்கரை) ஆகிவற்றையும் சேர்த்து மீண்டும் பிளெண்டரில் ஒரு நிமிடம் ஓடவிடுங்கள்.

இந்த கலவையுடன் 1:1 என்ற அளவில் ஜிஞ்சர் ஏல் அல்லது அல்லது சோடா கலந்து அருந்தலாம்.

© TamilOnline.com