தமிழைச் செம்மொழியாக்கக் கோரிப் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக டெல்லியில் தமிழ் அறிஞர்கள் ஆகஸ்ட் 18இல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சி, டெல்லி தமிழ்ச்சங்கங்களில் இருந்தும் சுமார் 120க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதே சமயத்தில் தமிழக பாஜக தலைவர்களும் தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவாக பிரதமரைச் சந்தித்து மனு கொடுத்தனர்.
தமிழைச் செம்மொழியாக்க மத்திய அரசு செவி சாய்க்குமா?
கேடிஸ்ரீ |