இந்தியாவில் அனைவருக்குமான பொது சிவில் சட்டம் கொண்டுவர பலமட்டங்களிலும் ஆலோசிக்கப்படுகிறது.
பாஜக அரசு பொது சிவில் சட்டம் குறித்துத் தீவிரமாக பரிசீலிக்கிறது. ஆனாலும் கருத் தொற்றுமையில்லாமல் சட்டம் நுழைக்கப்படாது என்று அத்வானி கூறியுள்ளதையும் கவனிக்க வேண்டும். அதே நேரம் இச்சட்டத்துக்கு எதிராகச் சிறுபான்மை மதப்பிரிவினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல அரசியல் கட்சிகளும்கூட இச்சட்டத்தை எதிர்க்கின்றன.
தமிழகத்தில் திமுக மற்றும் இடது சாரிக்கட்சிகள் இச்சட்டத்தை எதிர்க்கின்றன. ஆனால் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம் லீக் உள்ளிட்ட சில கட்சிகள் அதிமுக இத்தீர்மானத்தை திரும்பப்பெற வேண்டுமென கோரிக்கைவிடுத்துள்ளது.
பொதுசிவில் சட்டம் பொதுவாகுமா?
கேடிஸ்ரீ |