சிவகாமி விரைவில் திரைக்கு வருகிறது.
புதுப்புது இளம் கதாநாயகிகள் தமிழில் அறிமுகமானாலும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா தொடர்ந்து தமிழில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

'சிவகாமி' எனும் புதிய படத்தில் முக்கிய வேடத்தில் மீனா நடிக்கிறார். படத்தின் பெயரைப் பார்த்து பக்திப் படமோ என்று எண்ணினால் அது உங்கள் தவறு. இது பக்திப்படம் அல்ல.

இரண்டு ஊர்களுக்கிடையிலான இரு சாதிகளுக்கிடையிலான பகையுணர்வின் வெளிப்பாட்டைச் சொல்லும் கதை.

சிவகாமி என்ற குறத்திப்பெண் இந்த இரண்டு ஊருக்கும் சென்று பாட்டுப்பாடிப் பிழைப்பு நடத்துபவள். இந்த சிவகாமி - மீனாவால்தான் இரு ஊருக்கும் சமாதானம் வரப்போகிறதாம்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com