தேவையான பொருட்கள்
கடுகு - ஒரு பெரிய ஸ்பூன் புளி - 1 எலுமிச்சை அளவு உப்பு - தேவைக்கேற்ப துவரம் பருப்பு - 1 தேக்கரண்டி மிளகாய் வற்றல் - 5 அல்லது 6 தனியா (மல்லி) - 1 தேக்கரண்டி கருவேப்பிலை - சிறிதளவு காய்கறிகள் - எதுவானாலும் நல்ல எண்ணெய் - 4 தேக்கரண்டி
செய்முறை
வெறும் வாணலியில் துவரம் பருப்பு, தனியா (மல்லி), மிளகாய் வற்றல் ஆகியவற்றை வறுத்துக் கொண்டு (கடுகு வெடிக்க வேண்டும்) பொடி செய்து கொள்ளவும். (எண்ணெய் வேண்டாம்)
புளியை ஊறவிட்டு கரைத்து வைத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய்விட்டு காய்களை போட்டு வதங்கியதும் புளி தண்ணீர் விட்டு உப்புப்போட்டுக் கொதிக்க விடவும்.
காய்கள் வெந்ததும் செய்து வைத்துள்ள பொடியைப் போட்டுக் கட்டி இல்லாமல் கரண்டியால் கரைத்து கொதித்ததுடன் கருவேப்பிலை போட்டு இறக்கவும்.
தங்கம் ராமசாமி |