மோகன்லாலுடன் ஜோடியாக தேவயானி
நடிகை தேவயானி 'காதலுடன்' படத்தைத் தயாரித்து கையைச் சுட்டுக்கொண்டார். இப்போது தன்னைத்தேடி வரும் எல்லா வாய்ப்புகளையும் ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார்.

தற்போது மோகன்லாலுடன் ஜோடியாக 'பாலேட்டன்' என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வி.எம். வினு என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் தனக்கு அருமையான கதாபாத்திரம் கிடைத்திருப்பதாக மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.

தமிழில் திருமணமான நடிகைகள் என்றால் யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ஆனால் அங்கு அப்படியில்லை. திருமணமான நடிகைகள் ஆனாலும் திறமையுள்ளவர்களாக கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர்களாக இருந்தால் நடிக்க வாய்ப்பு கொடுப்பார்கள் என்று தேவயானி குறிப்பிடுவது மிகையான கூற்றல்ல.

கேடிஸ்ரீ

© TamilOnline.com