காயத்ரி தமிழில் ஒரு ரவுண்டு வருவாரா?
பிரபல திரைப்பட நடன இயக்குநர்கள் எஸ். ரகுராம் திருமதி கிரிஜா ரகுராம் தம்பதியினரின் மகள் காயத்ரி ரகுராம். இவர் தமிழ்த் திரைப்பட உலகில் 2002 இல் அறிமுகமானார். இதுவரை எட்டுப் படங்களில் நடித்தாலும் இன்னும் குறிப்பிடத்தக்க நடிகையாக வளர முடியவில்லை.

சினிமாவில் வருவதற்குக் குடும்பப் பின்புலம் இருந்தும் தமிழில் முன்னணி நடிகையாக வருவதற்கு என்ன செய்யலாம்? தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துப் பெயர் எடுக்கவேண்டும் என்று கருதி இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாகிவிட்டார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com