வந்தவர்: ஏங்க அந்தப் பொடியனை வேலைய விட்டு எடுத்துட்டீங்க?
ஹோட்டல் முதலாளி: பின்ன என்னங்க, சாப்பிட வந்தவங்க "டிபன் ரெடியா?"ன்னு கேட்டா "நேத்தே ரெடி"ங்கறான்!
வெ. சந்திரசேகரன், சன்னிவேல், கலி·போர்னியா
******
''அடிக்கடி டென்ஷன் ஏன்?''
''பென்ஷன் லேட்டா வருது.''
******
''போன் பில் போனமாசம் இருநூறு வந்தது. இப்ப, ரெண்டாயிரத்து இருநூறு வந்திருக்கு!''
'' ஓ! ஊருக்குப் போன உன் மனைவி திரும்ப வந்தாச்சா!'
******
''ரேடியோ போட்டால்தான் என் குழந்தை தூங்கும்''
''டி.வி. போட்டாதான் என் குழந்தை தூங்கும்''
''முதுகுலே ரெண்டு போட்டால்தான் என் குழந்தை தூங்கும்.''
******
''பார்ட்டி வச்சிருக்கேன்! அவசியம் நீங்க வரணும்.''
''ஓ.கே. எந்த ஓட்டல்ல? எப்போ?''
'' அடுத்த வாரம் ஸன்டே கலிபோர்னியா பல்கலைக்கழக கேண்டினில்...''
******
எலும்பு முறிவு டாக்டர் வீடு எங்கே சார் இருக்கு?
******
இதென்ன! அந்த கடைக்கு புதுமையா ஆம்பளைங்க சமாசாரம் பேர் வச்சிருக்காங்க...''
''கிரைண்டர், மிக்ஸி, குக்கர் விற்கிறார்கள்...''
******
''உங்க கற்பனையில் உதித்த கிஸ்கிஸ்தான்; புஸ்புஸ்தான்னு நீங்க எழுதிய திரைப்பட பாடலுக்கு நாலுபேர் உரிமை கொண்டாடுறாங்களே! எப்படி?''
''அது குளோனிங் கற்பனை சார்!''
******
“ஐநூறு பக்கத்துக்கு ஒரு சிறுகதை எழுதி இருக்கேன் சார்!''
''யம்மாடி! அது வேண்டாம்; ஒரு ஜோக் எழுதித்தாங்க போதும்!''
'' ஓ.கே.! அம்பது பக்கத்துலே ஒரு ஜோக் எழுதித்தறேன்! சரியா!''
சுதர்ஸன் |